காய்கறிகள் மற்றும் பருப்பு சேர்த்து சூப் தயாரிக்கலாமா??

பருப்புடன் கேரட், பீன்ஸ், செலரி, இஞ்சி ஆகியவை சேர்த்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியமும் கிடைக்கும்.  

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 05, 2019 13:00 IST

Reddit
Monsoon Diet: Protein-Rich Lentil (Dal) Vegetable Soup To Stay Healthy
Highlights
  • பருவக்காலத்தின்போது உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம்தான்.
  • பருப்பில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் என்பதால் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.
  • வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய பொதுவான உடல் உபாதைகள் ஏற்படும்.  இவற்றை தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவதால் தொண்டை கரகரப்பு, முக்கடைப்பு போன்ற பிரச்னைகளை தடுக்கலாம்.  பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து எப்படி ஆரோக்கியமான சூப் தயாரித்து குடிக்கலாம் என்பதை பார்ப்போம்.  இது உங்கள் நாவின் சுவை அரும்புகளை தூண்டுவதுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.  

பருவக்காலம் மாற்றமடையும்போது, அதற்கேற்ற உணவுகளை சாப்பிடுவது அவசியம்.   உடலுக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்து துவரம்பருப்பில் இருக்கிறது.  இதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.  இத்துடன் கேரட், பீன்ஸ், செலரி, இஞ்சி ஆகியவை சேர்த்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியமும் கிடைக்கும்.  இதனை எப்படி செய்வதென்று பார்ப்போம். 
 

Newsbeepதேவையானவை: 

Listen to the latest songs, only on JioSaavn.com

பருப்பு - 1/2 கப் 
பீன்ஸ் - 1/2 கப் 
கேரட் - 1 கப் 
தக்காளி - 3 
செலரி - 1 கப் 
இஞ்சி - 1/2 துண்டு 
உப்பு - 1/2 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி 
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி 
நெய் - 2 மேஜைக்கரண்டி 
சீரகம் - 1/2 தேக்கரண்டி 
எலுமிச்சை சாறு - தேவையான அளவு 

செய்முறை: 
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.  
பின் அதில் ஏற்கனவே ஊறவைத்து பருப்பை சேர்க்கவும். 
மேலும் அதில் நறுக்கி வைத்த கேரட், பீன்ஸ், செலரி, இஞ்சி, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள் ஆகியவை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.  
7-15 நிமிடங்கள் வரை வெந்தபின் இறக்கி வைக்கவும்.   
அடுப்பில் கடாய் வைத்து அதில் நெய் சேர்த்து சூடானது, சீரகம் மற்றும் கரம் மசாலா சேர்த்து தாளித்து வேக வைத்த சூப்பில் சேர்க்கவும்.  
இறுதியாக எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம்.  
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement