நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பரட்டைக்கீரை!!

இந்த பரட்டைக்கீரையில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் நாட்பட்ட நோய்கள் குணமாகிறது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 02, 2019 17:47 IST

Reddit
Type-2 Diabetes: Drinking Kale Juice May Help Regulate High Blood Sugar

ப்ரோக்கோலிக்கு அடுத்து, பரட்டைக்கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.   இதனை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் ஹார்மோன்கள் சீராக இயங்குகிறது.  கொலஸ்ட்ரால் அளவும் சீராக இருக்கிறது.  இதில் ஆண்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா 3 இருப்பதால் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மையும் இருக்கிறது.  இந்த பரட்டைக்கீரையில் பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்கிறது.  வைட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.  பரட்டைக்கீரையின் சாறு எடுத்து அதனை குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  இன்சுலின் சுரப்பை தூண்டுவதுடன், சிறுநீரகம், இருதயத்தின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.  கண்கள், பாதம் மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படக்கூடிய நாட்பட்ட நோய்களை போக்கும் தன்மை கொண்டது.  இந்த கீரையின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகளை பார்ப்போம். 

க்ளைசமிக் இண்டெக்ஸ்: 
இதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிக குறைவாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  

ஸ்டார்ச்: 
பரட்டைக்கீரையில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது.  

ஆண்டிஆக்ஸிடண்ட்:
இந்த பரட்டைக்கீரையில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் நாட்பட்ட நோய்கள் குணமாகிறது.  

கலோரிகள்: 
பரட்டைக்கீரையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் இதன் சாறு எடுத்து பருகலாம். 

நார்ச்சத்து: 
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருப்பதுடன் மலச்சிக்கல் குணமாகிறது.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  DiabetesKale

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement