உடல் எடை குறைப்புக்கான டயட் டிப்ஸ்

உடல் எடை குறைப்பு என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடும் அதிசயம் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: October 05, 2018 16:49 IST

Reddit
Weight Loss: 3 Ultimate Diet Tips To Lose Weight And Burn Belly Fat

நீங்கள் உங்கள் எடை குறைப்பிற்கான முயற்சியை தொடங்குவதற்கு முன் பலரது ஆலோசனைகளை கேட்டிருப்பீர்கள் அல்லது புத்தகங்களில் படித்திருப்பீர்கள் அல்லது சமூக வலைதளத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால், உடல் எடை குறைப்பு என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடும் அதிசயம் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஒருவேளை, ஒரே மாதத்தில் 8 கிலோ முதல் 10 கிலோ வரை குறைக்கக்கூடிய சில விஷயங்களில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் அது நிச்சயம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீர்குலைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரியான உணவுமுறை, உடற்பயிற்சி என உங்கள் வாழ்வியல் முறையில் நீங்கள் மாற்றும் போது தானாகவே உங்கள் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.

அதிகபடியான பசியை கட்டுப்படுத்துவதில், வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். துரித உணவுகளை தவிர்த்து, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமாக உடலில் நீரிழப்பு ஏற்படாத வகையில் நிறைய நீர் அருந்த வேண்டும். உடல் எடை குறைப்பில் நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது உணவு பழக்கத்தில்தான். கலோரிகள் குறைவான மற்றும் உங்களை நாள் முழுக்க நிறைவாகவும் வைத்திருக்க கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.

எடை குறைப்பு சற்றே கடினமான விஷயம் தான் என்றாலும் இதற்கு மன உறுதியும், பொறுமையும் மிகவும் அவசியம். சிலவற்றை தவிர்ப்பது கடினமாக இருந்தாலும் மனதை கட்டுப்படுத்தி நீங்கள் முயற்சித்தால் கட்டாயமாக உங்கள் எடை குறையும். உடல் எடை குறைப்பிற்கான சில எளிய வழிகளை பார்க்கலாம்.

உணவில் புரதத்தை சேர்த்து கொள்ளவும்

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உணவில் புரதத்தை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்த புரதம், உடலில் எடையை சீராக வைத்திருக்க கூடிய ஹார்மோன்களை மாற்றும் தன்மை கொண்டது. வளர்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் எடை குறைய உதவுகிறது. சிக்கன், மீன், முட்டை, பால் பொருட்கள், பருப்பு வகைகள், தானியங்கள் போன்றவற்றில் புரத சத்து நிறைந்திருப்பதால் தினசரி உணவில் தவறாமல் சேர்த்து கொள்வது அவசியம்.

சர்க்கரை மற்றும் ஸ்டார்ச்சை தவிர்க்கவும்

சர்க்கரை, ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவற்றை தவிர்ப்பதனால், உங்கள் பசியை குறைக்க முடியும். கார்போஹைட்ரேட்டை எரிப்பதற்காக உங்கள் உடல் தானாக சேமித்த கொழுப்பை கரைக்க ஆரம்பித்துவிடும். மேலும் கார்போஹைட்ரேட் உணவை தவிர்ப்பதால், உடல் எடை குறைவதோடு இன்சுலில் அளவும் குறைகிறது. இன்சுலினின் அளவு குறையும்போது சிறுநீரகம் சோடியத்தை அதிகம் வெளியேற்றுவது தடுக்கப்படும்.

வளர்சிதை மாற்றம் தூண்டப்படுகிறது

உடலில் வளர்சிதை மாற்றத்தை தூண்ட கூடிய சிலவற்றை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ளலாம். நிறைய தண்ணீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம். ஆரோக்கியமான எண்ணெயில் உணவை சமைக்கலாம். க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளலாம். இரவில் எட்டு மணிநேரம் உறங்க தவற வேண்டாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement