மழைக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்!!

பீச் பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  இதில் வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கெரோட்டின் ஆகிய சத்துக்கள் இருக்கிறது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 17, 2019 11:42 IST

Reddit
Monsoon Diet: 5 Fruits You Should Eat To Boost Your Immunity This Season
Highlights
  • பருவக்கால மாற்றத்தின் போது உடல் உபாதைகள் ஏற்படும்.
  • ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கும் உணவுகளை சாப்பிடலாம்.
  • நாவற்பழம், பீச், மாதுளை போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிடலாம்.

மழைக்காலத்தை இதமாக்க, தேநீருடன் சூடான சமோசா, பஜ்ஜி, போண்டக்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்போம்.   இவை சுவையாக இருந்தாலும் வயிற்றுக்கு உகந்த உணவல்ல.  மழைக்காலத்தில் தொற்று நோய் கிருமிகளால் மலேரியா, காலரா போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.  இந்நேரத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்த்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.  ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.  அப்படிப்பட்ட பழங்கள் சிலவற்றை பார்ப்போம்.   

1. நாவற்பழம்: 

நாவற்பழத்தில் வைட்டமின், பொட்டாஷியம், இரும்புச் சத்து ஆகியவை இருக்கிறது.  இது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி இரத்த சர்க்கரையையும் சீராக வைத்திருக்கும்.  நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி நாவற்பழத்தை சாப்பிட்டு வரலாம். 

3domo3l

 

செர்ரி: 

செர்ரியில் ஆண்டி-கார்சினோஜெனிக் தன்மை இருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதுடன் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.  செர்ரியில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாஷியம் அதிகபடியாக இருப்பதால் உடலில் நோய் தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது.  

மாதுளை:

மாதுளையில் வைட்டமின் பி, மற்றும் ஃபோலேட் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகிறது.  உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தை தடுக்க தினமும் மாதுளையை சாப்பிடலாம்.  

பப்பாளி:

பப்பாளியில் பப்பைன் என்னும் என்சைம் இருப்பதால், செரிமானத்தை சீராக்குகிறது.  இதில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.    

toju7pdg

 

பீச்:

பீச் பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  இதில் வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கெரோட்டின் ஆகிய சத்துக்கள் இருக்கிறது.  இதனை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.  

இந்த பழங்களை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் குடிக்கலாம்.  யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிடுவதால் அதன் சத்து இருமடங்காக கிடைக்கிறது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement