NDTV Food Desk | Updated: December 06, 2018 18:43 IST
சர்வதேச சுற்றுசூழல் பத்திரிக்கை ஆய்வு அறிக்கையின்படி, அதிகரித்து வரும் காற்று மாசுப்பாட்டால் மூச்சு திணறல், இதய நோய்கள் போன்று பல உடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக கூறியுத்துள்ளது. மாசுப்படுத்தலுக்கு ஓசோன் பாதிப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிவித்துயிருக்கிறார்கள்.நமது வாகன புகைகள் நிறைந்த சூழலும் கூட காரணம் தானே. நம்மால முழுவதுமாக காற்று மாசுபாட்டுயிலிருந்து தப்பிக்க முடியாவிட்டாலும்.. சில வழிகள் மூலம் நம்மை காத்துக்கொள்ள முடியும்.
1. வைட்டமின் சி :
வைட்டமின் சி என்பது நமது உடலில் மிக வலிமையான ஆக்ஸிஜனேற்றர்களில் ஒன்று. நீரில் கரையைக் கூடிய இந்த வைட்டமின் உடல் முழுவதும் பரவி , கெட்ட என்ஸைம்களை அழிக்கும்.எலுமிச்சை, ஆல்மா, கொய்யபழம் போன்ற பழங்களில் அதிகமாக வைட்டமின் சி இருக்கிறது.
2. வைட்டமின் ஈ டயட் :
ஆண்டிஆக்ஸிசனட் செயலபாடுகளை அதிகரிக்க கூடிய வைட்டமின் ஈ உள்ள பீட்டா கரோடினானது உடலில் ஏற்படும் வீக்கம், எரிச்சல் போன்றவைகளை தடுக்க சிறந்தது. மேலும் இது வைட்டமின் ஏ-வாக மாறும் தன்மைக்கொண்டது. கேரட், முள்ளங்கி, பசலைகீரை ஆகியவற்றில் வைட்டமின் ஈ நிறைந்துயிருக்கிறது.
3.ஓமேகா- 3 :
தூசுகளினால் ஏற்படும் இதய கோளாறுகளிலிருந்து பாதுக்காக்க ஓமேகா- 3 எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இது இதயத்திற்கு வலிமையும் சேர்க்கும். மேலும் பாதாம் , அக்ரூட், சியா விதைகள், ஆளி விதை , கீரைகளை உணவில் எடுத்துக்கொள்வதும் அவசியம்.
4 . வைட்டமின் ஈ நிறைந்த உணவு :
உடலில் கரையும் நல்ல கொழுப்பான இந்த வைட்டமின் உடல் திசுகளில் காயம் ஏற்படுவதலிருந்து முதலில் பாதுக்காப்பது. பாதாம், சூரியகாந்தி விதைகள், சால்மன், மிளகு தூள் போன்வற்றின் மூலம் இதை பெறலாம்.
Comments