பதப்படுத்தப்பட்ட உறைந்த நிலையிலான உணவுப்பொருள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுமா?

சுகாதார அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பேக் செய்யப்பட்ட உணவுகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்கின்றனர்.

   |  Updated: August 19, 2020 17:40 IST

Reddit
Should You Avoid Eating Frozen Food Amid Covid-19? Experts Say No Need

உணவின் மூலமாக வைரஸ் பரவுதற்கான ஆதாரங்கள் இல்லை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சில நாடுகளில், சில மண்டலங்களில் ஊரடங்கு தளர்வுப்படுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களல் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. ஆனால், புதுவிதமான நோய்த்தொற்று ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. 

அண்மையில் சீனாவில் பதப்படுத்தப்பட்ட உறைந்தநிலையிலான  சிக்கன் உணவுகளில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த உறைந்தநிலையிலான சிக்கன் விங் உணவுகள் பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 

இதன் காரணமாக உணவுசங்கிலியின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுமா, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உறைந்த நிலையிலான உணவுகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.  இருப்பினும் சுகாதார அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,  பேக் செய்யப்பட்ட உணவுகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்கின்றனர். 

n2cpsil8உணவின் மூலமாக வைரஸ் பரவுதற்கான ஆதாரங்கள் இல்லை

ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் அவரசரநிலை திட்டத் தலைவர் மைக் ரயான் கூறுகையில், 'சாதாரண உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், டெலிவிரி செய்யப்படும் உணவுவகைகளைக் கண்டு பீதியடைய வேண்டாம். இவற்றின் மூலமாக வைரஸ் பரவுதற்கான ஆதாரங்கள் இல்லை' என தெரிவித்துள்ளார். 

இதேபோல் உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் பிரிவு மருத்துவர் மரியா வேன் கூறுகையில்,  சீனாவில் ஆயிரக்கணக்கான பேக்கேஜ்கள் சோதனை செய்யப்பட்டன. அவற்றில் வெறும் ஒருசிலவற்றில் மட்டும் தான், 10 சதவீதத்திற்கும் குறைவான பேக்கேஜில் மட்டும் தான் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உள்ளதாக கூறுகிறார்.

இந்த விவகாரம் குறித்து, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) இணையதளத்திலும்  செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், "தற்போது, உணவைக் கையாளும் போது அல்லது உணவை உட்கொள்ளும் போது அதில் கொரோனா நோய்த்தொற்று இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என்று கூறப்பட்டுள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com

அதன்படி,  கொரோனா வைரஸ் முதன்மையாக ஒரு சுவாச வைரஸ் ஆகும், இது நீர்த்துளிகள் பரிமாற்றம் மூலம் ஒருவருக்கு நேரடியாக பரவுகிறது. ஆகவே, கோவிட் -19 உணவில் இருந்து பரவுவதைப் பற்றி பீதியடையவோ அல்லது தவறான தகவல்களைப் பரப்பவோ தேவையில்லை. ஏனெனில் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 

இருப்பினும் , உணவு மற்றும் உணவு பேக்கேஜிங் கையாளும் போது நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஒருவர் எப்போதும் உணவைத் தயாரிப்பதற்கு முன்பு அல்லது உணவு பேக்கேஜிங் கையாண்ட பிறகு குறைந்தது 20 விநாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளைக் கழுவ வேண்டும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement