விரைவில் தொப்பையை குறைக்கும் நைட் ட்ரிங்க்!!!

இரவு தூங்க போகும் முன் ஆரோக்கியம் நிறைந்த கற்றாலை சாறு குடித்து வருவதால் உடலில் மெட்டபாலிஸம் அதிகரிக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 02, 2019 12:32 IST

Reddit
Weight Loss: Have This Powerful Bedtime Drink To Shed Your Belly Fat Fast
Highlights
  • கற்றாலை சாறு குடித்து வந்தால் தொப்பை குறையும்.
  • கற்றாலை சாற்றில் சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம்.
  • ஆயுர்வேத மருந்துங்கள் அனைத்திலுமே கற்றாலை சேர்க்கப்பட்டிருக்கும்.

நீங்கள் நீண்ட நாட்கள் உடல் எடையை குறைக்க போராடி கொண்டிருந்தால் எந்தெந்த உணவுகளில் ஆரோக்கியமானது, எவற்றில் கொழுப்பு சத்து அதிகம் மற்றும் உடல் எடையை அதிகரிக்கக்கூடிய உணவுகள் எவை என்று துள்ளியமாக தெரிந்து வைத்திருப்பீர்கள்.  சிலர் என்னதால் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தாலும், டயட் உணவை பின்பற்றினாலும் அவர்களுக்கு உடல் எடை குறையவே குறையாது.  இதனால் தங்கள் உத்வேகத்தை இழந்து சோர்வடைந்து விடுவர்.  உடல் எடை குறைக்க சில நுணுக்கங்களை உங்களுக்கு சொல்லத்தானே நாங்கள் இருக்கிறோம்.  கவலையை விடுங்கள்....டயட் உணவுகள், உடற்பயிற்சிகளுடன் சேர்த்து ஹெல்தி ட்ரிங்க்ஸையும் தொடர்ச்சியாக குடித்து வரலாம்.  அதுவும் உங்கள் ஹெல்தி ட்ரிங்கில் கற்றாலை இருந்தால் இன்னும் சிறப்பு.  பண்டைக்காலம் முதலே கற்றாலையை அழகு பராமரிப்பிற்கும் ஆரோக்கிய நலனுக்கும் பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள்.  உடனடி தீர்வு கொடுக்கக்கூடிய இந்த கற்றாலை உடலுக்கு நிறைய நன்மைகளை அள்ளித்தருகிறது.  இரவு தூங்க போகும் முன் ஆரோக்கியம் நிறைந்த கற்றாலை சாறு குடித்து வருவதால் உடலில் மெட்டபாலிஸம் அதிகரிக்கிறது.  இது உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது. 

opk0k7g8

 

கற்றாலை கசப்பு மிகுந்தது என்பதால் பெரும்பாலானோர்க்கு இதன் சுவை பிடிக்காமல் இருக்கலாம்.  இத்துடன் தேன் சேர்த்து சாப்பிட கசப்பு சுவை நீங்கும்.  உடல் எடை குறைப்பில் செரிமானத்திற்கு பெரிய பங்கு உண்டு.  கற்றாலை செரிமான சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.  குடல் பிரச்னைகள் உருவாகாமல் காக்கும்.  மொத்த செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது கற்றாலை.  கற்றாலை ஜூஸ் தயாரிப்பது மிகவும் எளிமையானதுதான்.  எப்படி என்று பாருங்கள். தேவையானவை:

கற்றாலை - 1 இலை

தண்ணீர் - 2 கப்செய்முறை:

ஒரு பெரிய கத்தியை கொண்டு கற்றாலையின் தோல் சீவி கொள்ளுங்கள்.  கற்றாலையை வெட்டும்போது மஞ்சள் நிற திரவம் வெளிவரும்.  அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து பின் உள்ளிருக்கும் சதையை வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.  மிக்ஸியில் இந்த இரண்டு மேஜைக்கரண்டி கற்றாலை சதையை போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.  இதனை ஒரு க்ளாஸில் ஊற்றி ஃப்ரஷாக குடிக்கலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.comஅடிக்கடி இந்த கற்றாலை ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறையும்.  வாரம் மூன்று முறை கற்றாலை ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement