சுவை-சத்து இரண்டும் வேண்டுமா..? காரசாரமான ‘மிளகாய் பொடி பாதாம்’ உடனே செய்யலாம்..

மாலையில் நம் பசியை தீர்க்கவும், உடலுக்கு வலிமை சேர்க்கவும் சில உணவுகளில், வீட்டிலேயே செய்து சாப்பிட அருமையான உணவு தான் இந்த ‘மிளகாய் பொடி பாதாம்’ (Gun Powder Almonds).

Written by: Ragavan Paramasivam  |  Updated: January 23, 2020 14:38 IST

Reddit
Spicy Delicious 'Gun Powder Almond' dish can be prepared easily at home, read here

தினமும் மாலை 4 மணி ஆனால் போது, எதோ ஒன்று நம் வயிற்றையும் மனதையும் எதிர்பார்க்க வைக்கும் அது வேறொன்றும் அல்ல, சிறு பசி தான் அது. ஸ்னாக்ஸ் என்று ஆங்கிலத்தில் ஸ்டைலாக சொல்லக்கூடிய சிற்றுண்டி சாப்பிடும் நேரம் அது. பலரும், அந்த நேரத்தில், ஒரு டீ அல்லது காபியுடன் கடைகளில் கிடைக்கும் பாக்கெட் செய்யப்பட்ட காரசாரமான நொறுக்குத் தீனியை ருசி பார்ப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட நொறுக்குத் தீனிகள் நம் உடலுக்கு பல விதங்களில் தீமையையே தருகின்றன என பல ஊட்டச்சத்து நிபுனர்கள் ஆராய்ந்து எச்சரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

அதையடுத்து, பலரும் ஆரோக்கியமான மாலை வேளை உணவுகளைத் தேடி சாப்பிடுகின்ரனர். ஆனால், அவையும் வீட்டில் செய்வது போன்று வராது. அந்த வகையில், மாலையில் நம் பசியை தீர்க்கவும், உடலுக்கு வலிமை சேர்க்கவும் சில உணவுகளில், வீட்டிலேயே செய்து சாப்பிட அருமையான உணவு தான் இந்த ‘மிளகாய் பொடி பாதாம்' (Gun Powder Almonds). காரசாரமான சுவையையும், அதிக சத்துக்களையும் கொண்ட இந்த பாதாம் பருப்பு உணவை வீட்டிலேயே எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கலிபோர்னியா பாதாம் - 120 கிராம்
மெட்ராஸ் துப்பாக்கி தூள் - 10 கிராம்
சாட் மசாலா - 5 கிராம்
நெய் அல்லது ஆலிவ் எண்ணெய் - 10 கிராம்

மிளகாய் பொடி தயாரிப்பதற்கான பொருட்கள்:

கடலை பருப்பு - 20 கிராம்
உளுத்தம் பருப்பு - 20 கிராம்
பூண்டு - 2 பற்கள்
கறிவேப்பிலை - 6 இல்லை
சிவப்பு மிளகாய் - 3 கிராம்
கடுகு -3 கிராம்
எள் - 10 கிராம்
ஹிங் - 3g
நெய் - 15 கிராம்Listen to the latest songs, only on JioSaavn.comசெய்முறை:

Comments

  • காரப்பொடியை (Gun powder) தயாரிக்க, நெய் / ஆலிவ் எண்ணெயை சிறிது சேர்க்கவும். பாதாம் பருப்புடன் நெய் சேந்த சுவை நன்றாக இருக்கும் என்பதால், நெய் சிறந்தது. கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, எள், சிவப்பு மிளகாய் (உங்கள் சுவைக்கு ஏற்ப) மற்றும் பூண்டு சேர்க்கவும்.
  • இப்போது, ​​நிறம் மாறும் வரை இதையெல்லாம் குறைந்த தீயில் வறுக்கவும். சிறிது நேரம் குளிர்ந்து, பின்னர் அதை அரைத்துக்கொள்ளவும்.
  • இதற்கிடையில், பாதாம் பருப்பை 20 நிமிடம் நன்கு வறுக்கவும். இப்போது, ​​பாதாம் பருப்பில் காரப்பொடியை சேர்க்கவும். மேலும், சிறிது நெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சேர்க்கவும், இதனால் காரப்பொடி வறுத்த பாதாம் பருப்புடன் நன்றாக பிணைக்கப்படும். இதை நன்றாக கலக்கவும்.
  • ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும். பெருங்காயம் காரப்பொடியுடன் சேர்ந்து ஒரு சிறந்த சுவையைத் தரும்.
  • உப்புக்கு பதிலாக, சாட் மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும். காரமான சிற்றுண்டியை சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது இதை செய்து சேமித்து வைத்து சாப்பிடலாம்!


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
Advertisement