நார்ச்சத்து நிறைந்த சாலட்டை எப்படி தயாரிக்கலாம்!!

முளைக்கட்டிய பாசிப்பயறு, கேரட், வெள்ளரி, ஸ்ப்ரிங் ஆனியன், ஃபிஷ் சாஸ், வினிகர், பூண்டு, பச்சை மிளகாய், ஆலிவ் எண்ணெய் ஆகியவை சேர்த்து ருசியான சாலட் தயாரித்து சாப்பிடலாம்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 14, 2019 13:40 IST

Reddit
Weight Loss: This Protein And Fibre Packed Salad Is Sure To Aid Your Weight Loss Plan
Highlights
  • உடல் எடை குறைப்பிற்கு நீண்ட காலம் தேவைப்படும்.
  • கேரட்டில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
  • வெள்ளரியில் 96 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது.

உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு இரண்டும் மட்டுமே உடல் எடை குறைக்க உகந்தது.  உங்கள் உடலுக்கு ஏற்றாற்போல டயட்டை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.  காலை எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதில் தொடங்கி, அந்தந்த பருவத்தில் கிடைக்கக்கூடிய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவது, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை உட்கொள்வது போன்றவற்றை பின்பற்றினால் உடல் எடை குறையும்.   புரதம் மற்றும் நார்ச்சத்து இரண்டுமே உடல் எடை குறைப்பதற்கான சரியான உணவுகள்.  பசியை தூண்டக்கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோனை சீராக வைப்பதில் புரதத்திற்கு முக்கிய பங்கு உண்டு.  பொரிக்கப்பட்ட மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து, நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.  

8lqpjq2g

 

 

உடல் எடை குறைக்க முளைக்கட்டிய பயறுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.  அல்லது ஆரோக்கியமானவற்றை கொண்டு சாலட் தயாரிக்கலாம். முளைக்கட்டிய பாசிப்பயறு, கேரட், வெள்ளரி, ஸ்ப்ரிங் ஆனியன், ஃபிஷ் சாஸ், வினிகர், பூண்டு, பச்சை மிளகாய், ஆலிவ் எண்ணெய் ஆகியவை சேர்த்து ருசியான சாலட் தயாரித்து சாப்பிடலாம்.  இதில் புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருக்கிறது.  அத்துடன் 100 கிராம் வெள்ளரியில் 16 கலோரிகள் இருக்கிறது.  மேலும் 96 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது.  இதனை ஆலிவ் ஆயில் கொண்டு செய்தால் ஆரோக்கியமாக இருக்கும்.  

இந்த சாலட்டை மதிய உணவாக சாப்பிடலாம்.  தொடர்ச்சியாக இதுபோன்ற சாலட்களை சாப்பிட்டு வந்தால் உடல் எடை தானாக குறையும்.  

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com