நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மொருமொரு ஸ்நாக்ஸ்!!

கடைகளில் கேரட் சிப்ஸ் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 18, 2019 15:49 IST

Reddit
Diabetes Diet: 4 Healthy Chips You May Like To Munch On
Highlights
  • கீரைகளை கொண்டு சிப்ஸ் செய்து சாப்பிடலாம்.
  • சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து இருக்கிறது.
  • கேரட் கொண்டு சிப்ஸ் செய்து சாப்பிட்டால் நார்ச்சத்து கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகள் எப்போதுமே சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும்.  கெட்சப், மயோனிஸ், ஃப்ரூட் செரல் ஆகியவற்றில் செயற்கை இனிப்பு அதிகபடியாக சேர்க்கப்பட்டிருக்கும்.  இதனால் உடலிலும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், உடல் பருமனாகவும் வாய்ப்பிருக்கிறது.  நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த மற்றும் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.  மாலை நேர பசியை போக்க, ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகளை பார்ப்போம். ராகி சிப்ஸ்:

ராகியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது.  இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.  மேலும் இரும்புச்சத்து, மக்னீஷியம், கால்சியம் போன்றவை அதிகமாக இருக்கிறது.  ராகி சிப்ஸை வீட்டிலேயே கூட செய்து சாப்பிடலாம். அல்லது மார்கெட்டில் கிடைக்கக்கூடிய நல்ல பிராண்ட்களில் வாங்கி சாப்பிடலாம்.

 

கீரை சிப்ஸ்:

கீரைகளில் ஸ்டார்ச் இல்லை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  ஆலிவ் எண்ணெயில் நீங்கள் விரும்பும் கீரையை சேர்த்து 7-10 நிமிடங்கள் அவனில் வைத்து எடுத்து பின் சூடாக சாப்பிடவும். 

crispy spinach
 

சர்க்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்:

நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  ஆனால் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்.  இதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கிறது.  மேலும் நார்ச்சத்தும் அதிக அளவு இருக்கிறது.  சிறுசிறு துண்டுகளாக மெல்லிதாக வெட்டி பேக் செய்து, ஹம்மஸ் உடல் சேர்த்து சாப்பிடலாம்.  

கேரட் சிப்ஸ்:

கடைகளில் கேரட் சிப்ஸ் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  கேரட்டின் தோல் நீக்கி, மெல்லிதாக வெட்டி பேக் செய்து சாப்பிடலாம்.  இவற்றில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறது. Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  DiabetesChips

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com