இந்த மழைகாலத்தில் உங்களை சூடாக வைத்துக்கொள்ள, 5 சுவையான சூப் ரெசிபிகள் இதோ..!

குளிர்காலத்தில் சூப் சிறந்த ஆறுதல் உணவாகும். இந்த பருவத்தில் நீங்களே வீட்டில் செய்யக்கூடிய 5 சிறந்த சூப் ரெசிபிகளை பார்க்கலாம்.

Translated by: Ragavan Paramasivam  |  Updated: November 07, 2019 12:01 IST

Reddit
5 Delicious Winter Soup Recipes To Keep You Warm

மழைகாலத்தில் சூப்கள் சிறந்த உணவாக உள்ளது.

Highlights
  • குளிர்காலத்தில் சூப்கள் ஒரு முழுமையான மற்றும் ஆறுதல் உணவாகும்
  • சூப்கள் மனநிறைவுடன் உட்டச்சத்துக்களையும் அளிக்கும்.
  • குளிர்காலத்தில் வீட்டில் தயாரிக்க சிறந்த 5 சூப்கள் இங்கே..

குளிர்காலம் தொடங்கிவிட்டதால், நம் உடலை சூடாக வைத்துக்கொள்ளவே விரும்புவோம். வெளிப்புறத்தில் கதகதப்பான ஆடைகள், கம்பளிகளைப் பயன்படுத்தினாலும், உடலுக்கு உள்ளிருந்து ஒரு இதமான சூடு தேவைபடுகிறது. மழைகாலத்தில் ஒரு கிண்ணம் முழுக்க சூப் குடிப்பது போன்ற சுகம் எதிலும் இருக்காது. சூப்கள் உங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. அதற்கும் மேலாக, அவை தயாரிக்க மிகவும் எளிதானது.! ஆகவே, நீங்கள் குளிர்கால சூடாக எதாவது குடிக்க நினைத்தாலும் அல்லது இலகுவான மற்றும் எளிதான உணவை எடுத்துக்கொள்ள நினைத்தாலும், ஒரு கிண்ணம் சூப் எப்போதும் கை கொடுக்கும்.

சூப் ஒரு முழு உணவாக இருப்பது அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொறுத்தது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொருட்களை சேர்க்கவும். குளிர்காலம் என்பதால் உங்கள் உடலுக்கு ஆறுதல் தரும் நறுமணமிக்க சூடான சூப்களை தயாரிக்க வேண்டிய நேரம் இது.

இந்த குளிர்கால பருவத்தில் தயாரிக்க 5 சிறந்த சூப்கள் :

1.

தக்காளி மற்றும் மல்லிகை தேநீர் சூப்

மல்லிகை தேநீரின் நன்மை தக்காளி ப்யூரியுடன் இணைந்தால், இது வீட்டில் மகிழ்ந்து சுவைக்க சரியான குளிர்கால சூப்பாக இருக்கும். சிறிது மிளகு மற்றும் தைம் இலைகளுடன், உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் (truffle oil) காளான் எண்ணெய் ஆகியவை சேர்க்கப்பட்டு சூப்பை உயிரூட்டுகிறது. செய்முறையை இங்கே காணலாம்.

(Also Read: Winter Diet: 4 Sumptuous Spinach Soup Recipes For A Wholesome Meal)

fc6amko
மல்லிகை டீ சேர்க்கப்பட்ட கிளாசிக் தக்களி சூப்.

2.

முல்லிகடவ்னி சூப்

இது ஒரு ஆங்கிலோ-இந்திய உணவாகும். முல்லிகடவ்னி என்பது ஒரு தமிழ் சொல், இதற்கு மிளகு-குழம்பு என்று அர்த்தமாகும். இந்த ருசியான சூப், சூப் மற்றும் ரசத்தின் கலப்பினமாகும், மேலும், இது முழு மிளகுடன் தயாரிக்கப்படுகிறது. இது வழக்கமாக கோழி இறைச்சியை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் தேங்காய் பால், இலவங்கப்பட்டை, புளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் ஒரு காய்கறி சூப்பாக வைக்கலாம். செய்முறையை இங்கே காணலாம்.

3.

பாதாம் மற்றும் காளான் சூப்

நன்கு நறுக்கப்பட்ட காளான்கள், பாதாம், மிளகு, வெண்ணெய், கிரீம் மற்றும் பால் ஆகியவற்றின் நுட்பமான சுவைகளுடன் செய்யப்படும் இந்த நறுமணம் மிக்க சூப், குளிர்கால மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்தவருடன் பகிர்ந்துகொள்ள அருமையான உணவாகும். செய்முறையை இங்கே காணலாம்.

09nl6rmg
உங்கள் உடலுக்கு இதமளிக்கும் சுவையான பாதாம்-காளான் சூப்.

4.

பீட்ரூட் சூப்

இந்த பருவகால காய்கறியை மிஞ்ச எதுவும் இல்லை! பீட்ரூட் பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய குளிர்கால உணவாகவும். அதனுடன் சுரைக்காய் மற்றும் நிறைய மசாலாப் பொருட்கள் இணைந்தால், அதற்கு அருகில் வர எதுவும் இல்லை. சிறிதளவு உப்பு மற்றும் மிளகுடன், பீட்ரூட் சூப்பை சூடாக அல்லது ஆறவைத்து வழங்கலாம். செய்முறையை இங்கே காணலாம். 

beetroot soup recipe
குளிர்கால உணவாக பீட்ரூட்டை உட்கொளவது சிறந்தது.

5. Carrot Ginger Soup

கேரட் இஞ்சி சூப்

Listen to the latest songs, only on JioSaavn.com

மற்றொரு அருமையான குளிர்கால காய்கறியான கேரட் மிகுந்த ஊட்டச்சத்துக்கள் நிரம்பியது. எல்லா பருவத்திலும் அறுவடை செய்யப்படும் இந்த காய்கறி குளிர்கால சூப்களில் சேர்க்க சிறந்த உணவாகும். இதில் சேர்க்கப்படும் இஞ்சிகூடுதல் நன்மைகளைத் தருகிறது. செய்முறையை இங்கே காணலாம் .

பருவத்தில் இந்த அற்புதமான சூப் ரெசிபிகளை வீட்டிலேயே முயற்சி செய்து உண்டு மகிழுங்கள். இதில், உங்களுக்கு பிடித்த ஒன்றை கீழே உள்ள கருத்துகள் பிரிவில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement