கரு வளையத்தைப் போக்க 7 அற்புதமான கண்மாஸ்க்குகள்

Smriti Agarwal  |  Updated: July 23, 2018 15:38 IST

Reddit
7 Amazing Eye Masks to Get Rid of Dark Circles and Tired Eyes

இன்றைய காலத்தில், தொழில்நுட்பம் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. இதில் முக்கியமாக பாதிக்கப் படுவது கண். கணினி திரைகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால்கண் சோர்வு மற்றும் கரு வளையங்கள் உருவாகிறது.

உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு தவிர தினசரி உடற்பயிற்சி முக்கியம், அது பார்வை நரம்புகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க  உதவுகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க  உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்கள் இங்கே 

1. தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த நன்மைகளைக் கொண்டுள்ளது. இது கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மற்றும் கண் வீக்கத்தை அகற்றும். கண்களுக்கு கீழ் ஒரு சில துளிகள் தேங்காய் எண்ணெய் கொண்டு வறண்ட இடங்களில் மசாஜ் செய்யுங்கள்.. ஒவ்வொரு நாளும் இதை செய்ய உடனே வித்தியாசத்தை உணரலாம். 

coconut oil

2. பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெய்யுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
 

new almond oil

3. ரோஸ் வாட்டர்  

சோர்வான கண்களுக்கு இது சிறந்த மருந்தாகும். சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இது கண்சோர்வை குறைக்கும்.
 

rose water

4. பால் மற்றும் பேக்கிங் சோடா 

பால் சோர்வுற்ற கண்களுக்கு  ஒரு வரம். 4 தேக்கரண்டி பால் மற்றும்  2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலக்கவும். அதை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், கண்களைச் சுற்றி இந்த குளிர்ந்த கிரீம்மை மாஸ்க் போல் பயன்படுத்துங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்கள் கண்கள் புத்துயிர் மற்றும் ஆரோக்கியம்  பெரும்.

baking soda

5. கிரீன் டீ

பச்சை தேயிலை, கறுப்பு தேநீர் மற்றும் பல்வேறு பிற மூலிகை தேநீர் வகைகள் கருவளையத்திற்கு பெரிய தீர்வாகும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சில தேநீர் பைகளை வைக்கவும். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்கும். 

tea bags

6. வெள்ளரிக்காய்

இது பெரும்பாலும் கண்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருள். இதை உங்கள் கண்களுக்கு புத்துயிர் மற்றும் புதிய தோற்றத்தைக் கொடுக்கும். வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.

cucumber

7. அன்னாசி பழ மாஸ்க்

கண் வீக்கம் மற்றும் கருவளையத்திற்கு மற்றொரு தீர்வு, மஞ்சள் தூள் மற்றும் அன்னாசி பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் இந்த கிரீம். இந்த கலவையை , ஒவ்வொரு நாளும் இரண்டு வாரங்களுக்கு, 30 நிமிடங்களுக்கு கணங்களில் மசாஜ் செய்து மாஸ்க் போல போடவும். இது ஒரு எளிய மாஸ்க் ஆனால் மிகவும் அருமையான  வித்தியாசங்களை அளிக்கும்.

Comments

pineapple vodka 625


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com