தினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..? பதில் இதோ...

இந்தியர்களான நாம், நமது ஊறுகாயை நேசிக்கிறோம், ஒவ்வொரு உணவிற்கும் துணையாக அவற்றை அனுபவிக்கிறோம். ஆனால் தினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்ல யோசனையா..? தெரிந்துகொள்ளுங்கள்...

Translated by: Ragavan Paramasivam  |  Updated: November 25, 2019 12:21 IST

Reddit
Is It Okay To Consume Pickles Everyday? Here's The Answer
Highlights
  • ஊறுகாய் என்பது இந்திய உணவு வகைகளில் மிக முக்கியமான பகுதியாகும்
  • சிலர் காரமான கிக்கிற்கு ஒவ்வொரு உணவோடும் ஊறுகாயை உட்கொள்கிறார்கள்
  • சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இரண்டும் ஆரோக்கியமற்றவை

ஊறுகாய் என்பது இந்திய உணவு வகைகளின் அழியாத பகுதியாகும். இந்திய ரொட்டிகள் மற்றும் அரிசி உணவுகளுக்கான இந்த காரமான துணையை ஒரு பார்வை பார்த்தால் போதும், நாவில் எச்சில் ஊறும். அதை தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரி என எந்த உணவுடனும் சாப்பிடலாம். சிலருக்கு துணையே தேவையில்லை, காரமான சுவைக்காக வெறுமென ஊறுகாயை மட்டுமே சாப்பிடுவார்கள். மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி வரை, இந்தியர்களான நாம் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்கிறோம். ஒவ்வொரு உணவிற்கும் மசாலா மற்றும் கிக்கான சுவை தேவைப்படுவதால், பலரும் ஊறுகாயை காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு  சாப்பிடும் பழக்கத்தில் உள்ளனர். ஆனால், தினமும் ஊறுகாய் சாப்பிடுவது ஆரோக்கியமானதா..?

ஊறுகாய் ஆரோக்கியமானது என்று சிலர் வாதிட விரும்புகிறார்கள், ஏனெனில் அவை உணவுப் பொருள்களை நொதித்தல் மூலம் தயாரிக்கப்படுகின்றன, எனவே, குடலுக்கு மிகச் சிறந்தவை. இருப்பினும், அதில் அதிக அளவு உப்பு இருப்பதால் இந்திய ஊறுகாய்களில் சோடியம் நிறைந்துள்ளது. மேலும், அவற்றில் ஏராளமான எண்ணெய் உள்ளது. உப்பு மற்றும் எண்ணெய் அவற்றைப் பாதுகாக்கவும், பூஞ்சை தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும் சேர்க்கப்படுகின்றன. உப்பு மற்றும் கிரீஸ் அதிகம் உள்ள உணவுகள் இதயத்திற்கு மோசமானவை, உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன, மேலும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும். ஏனென்றால், எண்ணெயில் ஹைட்ரஜனேற்றப்பட்ட அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன, அவை மிக மோசமான கொழுப்புகளாகும்.

Also Read: 7 Incredible Health Benefits of Pickle Juice: Drink Up!

aam ka achaar or mango pickle
இந்திய ஊறுகாய்களில் சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ளது.

டிரான்ஸ் கொழுப்பு உடலில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது எல்.டி.எல் கொழுப்பின் அதிகரிப்புக்கு காரணமாகிறது, இது இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பு உடலுக்கு மோசமானது மற்றும் வீக்கம், நீர் தேக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மேக்ரோபயாடிக் ஊட்டச்சத்து நிபுணரும் சுகாதார பயிற்சியாளருமான ஷில்பா அரோராவின் கூற்றுப்படி, "மசாலாப் பொருட்கள் (ஊறுகாய்களில்) செரிமான அமைப்பை எரிச்சலூட்டுகின்றன. மேலும், மலிவான எண்ணெய்களில் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன, அவை கல்லீரலுக்கு மிகவும் ஆபத்தானவை மற்றும் நச்சுத்தன்மை கொண்டவை." இருப்பினும், ஊறுகாய்-காதலர்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. மேற்கூறிய இந்த சுகாதார பிரச்சினைகள் இல்லாமல், ஊறுகாயை உட்கொள்ள சில வழிகள் உள்ளன.

உங்கள் ஊறுகாயை ஆரோக்கியமாக மாற்ற சில வழிகளை ஷில்பா அரோரா பரிந்துரைக்கிறார். "ஊறுகாய் என்பது காய்கறிகளை நொதித்து ஆண்டு முழுவதும் சாப்பிடுவதற்கான ஒரு பாரம்பரிய வழியாகும். கடுகு எண்ணெய் மற்றும் மசாலாப் பொருள்களைப் பயன்படுத்தி சரியான விகிதத்தில் ஆரோக்கியமான பொருட்களுடன் செய்தால் குடலுக்கு ஆரோக்கியமானது, நொதித்தல் செயல்முறை உடலை மீண்டும் துவக்கும் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை உருவாக்குகிறது." ஊறுகாய்களை அதிகமாக உட்கொள்வதை எச்சரிக்கும் விதமாக மேலும் சில வார்த்தைகளைச் சேர்த்த அரோரா, "ஊறுகாயை மிதமாகப் பயன்படுத்த வேண்டும், மேலும் பொருட்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றார். உங்கள் வழக்கமான ஊறுகாய்களை விட, இந்த ஊறுகாய்கள் வித்தியாசமாக ருசிக்கக் கூடியவை என்றாலும், ஆரோக்கியத்திற்கு தேவையற்ற ஆபத்துகளைப் பற்றி கவலைப்படாமல், அவற்றை சுதந்திரமாக சுவைக்க முடியும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com