ஹோட்டல் ஸ்டைல் கல் தோசை - ரெசிப்பி

Deeksha Sarin  |  Updated: August 17, 2018 21:46 IST

Reddit
This Is How You Make Restaurant-Style Kal Dosai

ஹோட்டல் வகை கல் தோசைகள், பலருக்கும் விருப்பமான டிப்பன் வகைளில் ஒன்று. ஆனால், பெரும்பாலான வீடுகளில் முறுகளான தோசைகளே சமைக்கப்படுகின்றது. வீட்டிலேயே எளிதாக சமைக்க கூடிய கல் தோசை ரெசிப்பியை ட்ரை செய்து பார்க்கவும்.

 

A post shared by Falooda Rani (@faloodarani) on

தேவையான பொருட்கள்

  • உளுந்து - ¼ கப்
  • வெந்தயம் - ¼ ஸ்பூன்
  • பச்சரிசி - ½ கப்
  • புழுங்கல் அரிசி - ½ கப்
  • உப்பு - ½ ஸ்பூன்
  • எண்ணெய் - 4-5 ஸ்பூன்

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில், பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். அதனுடன், வெந்தயம் சேர்க்க வேண்டும். பின்னர், தண்ணீர் சேர்த்து 7-8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில், உளுந்துடன் நீர் சேர்த்து 7-8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
2. ஊற வைத்த பிறகு, அரிசியை மாவாக அரைக்கவும். உளுந்தை தனியாக அரைத்து வைக்கவும். பின்னர், இரண்டையும் கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இந்த கலவையை 6-7 மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும்
3. தோசை கல்லில், எண்ணெய் தேய்த்து, மாவை ஊற்றவும். பின்னர், வட்ட வடிவில் தேய்க்கவும். மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு மூடவும். 2 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் சமைக்கவும். குறிப்பு: கல் தோசையை திருப்பிப் போட்டு சமைக்க கூடாது
4. சூடாக பரிமாறவும்.
 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement