நஞ்சை முறிக்கும் 'Detox Water' - மஞ்சளைக் கொண்டு வீட்டிலேயே தயாரிப்பது எப்படி..?

மோசமான உணவு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மாசுபாடு ஆகியவற்றால், உங்கள் உடல், வாகான வடிவத்தில் இருப்பது கடினமாகிறது என்பதை உணர்ந்தால், ஒருவேளை உங்களுக்கு detoxification (நச்சுநீக்கம்) தேவைப்படலாம்.

   |  Updated: October 22, 2019 20:15 IST

Reddit
Turmeric (Haldi) Water: 5 Benefits Of This Desi Detox Water And How To Make It

மஞ்சள் நீர் : மசாலாப் பொருட்கள் இந்திய உணவு வகைகளில் இன்றியமையாத பகுதியாகும்

Highlights
  • மஞ்சள், உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களைப் பெற்றுள்ளது
  • மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பிது
  • மஞ்சள் நீர் மூட்டு வலியை குறைக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், Detox பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உடலுக்கு நீங்களே ஒரு இடைவெளியைக் கொடுத்து, வழக்கமான உணவில் கிடைக்காத ஊட்டச்சத்துக்களை மேம்படுத்தி உங்களை நீங்களே Detoxify செய்து கொள்ளமுடியும்.

மோசமான உணவு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மாசுபாடு ஆகியவற்றால், உங்கள் உடல், வாகான வடிவத்தில் இருப்பது கடினமாகிறது என்பதை உணர்ந்தால், ஒருவேளை உங்களுக்கு detoxification (நச்சுநீக்கம்) தேவைப்படலாம். உங்கள் சமையலறையில் நிரம்பியிருக்கும் மசாலா பொருட்கள் மூலிகைகள் என உங்களுக்குத் தெரியுமா..? அது உங்களை உள்ளிருந்து புத்துயிர் பெறச்செய்வது மட்டுமல்லாமல், உங்கள் பல உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளும். மசாலாப் பொருட்கள் இந்திய உணவு வகைகளில் இன்றியமையாத பகுதியாகும், ஆனால் அவை வெறும் சுவையூட்டிகள் என்பதைக் காட்டிலும் அதிகம். அவற்றில், மஞ்சள் (ஹால்டி) உடலை புத்துணர்ச்சியுறச் செய்வதிலும், நச்சுகளை வெளியேற்றுவதிலும் தனி மதிப்பை பெற்றுள்ளது. 

Newsbeep

மஞ்சள் ஆரோக்கிய நன்மைகள் :

மஞ்சள் எல்லாவற்றிலும் மிக சக்திவாய்ந்த மசாலாப் பொருட்களாக உள்ளது. ஒவ்வொரு இந்தியர் வீட்டிலும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. நமது அன்றாட உணவில் மஞ்சள் சேர்ப்பதனால் ஏற்படும் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது :

பண்டைய காலத்திலிருந்து இந்திய மசாலாக்களில் ஒன்றாக இருக்கும் மஞ்சள், அதன் குணப்படுத்தும் பண்புகளுக்காக இப்போது உலகளவில் பிரபலமான பொருளாக மாறியுள்ளது. மஞ்சளில் உள்ள curcumin, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் free radical damage-ஐ தடுக்கும். மஞ்சளில் உள்ள Lipopolysaccharide அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளுக்குப் புகழ் பெற்றது.

2. வலியைக் குணப்படுத்துகிறது :

நீண்ட காலமாக, இந்தியர்கள் ஒரு சிட்டிகை மஞ்சள்தூளை பாலுடன் கலந்து, மூட்டு வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும், தொற்று மற்றும் காய்ச்சல் அபாயத்தைத் தடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்புகள் கீழ்வாத வலி மற்றும் லேசான வீக்கத்தையும் குணப்படுத்த உதவுகின்றன.

3. தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது :

மஞ்சள் பேஸ்ட் பழங்காலத்திலிருந்தே இந்திய தோல் மற்றும் அழகு சடங்குகளில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (antioxidants) உங்கள் சரும வயதை விரைவில் அதிகப்படுத்தும் free radical செயல்பாட்டை தடுக்க உதவுகின்றன. மஞ்சள் நீரை தினமும் குடிப்பதால் உங்கள் சருமம் மிகவும் பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் மாறக்கூடும்.

4. எடை இழப்பு மற்றும் செரிமானத்திற்கு உதவும் :

மஞ்சள் செரிமானத்தை அதிகரிக்க உதவும். மஞ்சளின் சில கூறுகள் பித்தப்பை உற்பத்தி செய்ய தூண்டுவதாக அறியப்படுகிறது. இதனால் செரிமான அமைப்பு மிகவும் வலுவடைகிறது. இது வீக்கம் மற்றும் வாயு அறிகுறிகளையும் குறைக்கலாம். நல்ல செரிமானம் ஒரு சிறப்பான வளர்சிதை மாற்றத்தை (metabolism) அடைவதற்கு முக்கியமானதாகும். அதேபோல், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம், நிலையான எடை இழப்பு மற்றும் எடை கட்டுப்பாட்டுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

5. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது:

மஞ்சள் உங்கள் கல்லீரலில் அதிசயங்களைச் செய்யலாம். இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி, கல்லீரலை detoxification செய்ய காரணமான மஞ்சள் அறியப்படுகிறது.

வீட்டில் மஞ்சள் நீரை (Detox Water) உருவாக்குவது எப்படி :

1. ஒரு பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

2. இப்போது, வேறொரு கப்பில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.

3. அதன்மேல், கொதிக்க வைத்த நீரை வெதுவெதுப்பாக ஊற்றவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

4. கடைசியாக, நீங்கள் விரும்பினால் இந்த மஞ்சள் நீரை இனிமையாக்க சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதனை ஆசையோடு, பொறுமையாக சாப்பிடுங்கள்.

இந்த Detox மஞ்சள் நீரை தவறாமல் குடிப்பதால், உங்கள் ஆரோக்கியமும் சருமமும் படிப்படியாக மேம்படுவதைக் காணலாம்.

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement