இரும்புச் சத்து குறைபாட்டை போக்கும் ராகி ரெசிபிகள்!!

க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவான உணவுகளை உட்கொள்வதாலும் இரத்த சர்க்கரை அளவு குறையும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 07, 2019 17:07 IST

Reddit
Diabetes Diet: 4 Ragi-Based Recipes Diabetics May Include In Their Diet 

நாளுக்கு நாள் நோய்கள் பெருகி கொண்டே போவதை நாம் அறிவோம்.  உலகளாவில் பெரும்பகுதி மக்களை பாதித்து கொண்டிருக்கக்கூடியது இந்த நீரிழிவு நோய்.  தற்போதைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் இளம் வயதினரிடையேயும் நீரிழிவு நோயின் பாதிப்பை காண முடிகிறது.  நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாதிருத்தலும் இதற்கு முக்கிய காரணம்.  நீரிழிவு நோய்க்கு கொடுக்கப்படும் சிகிச்சையின் விளைவாக உடல் பருமன், இருதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு ஆகியவை ஏற்படுகிறது.  ஆதலால் நீரிழிவு நோயை எப்படி எளிமையாக கையாளுவது என்பது குறித்து தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.  க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவான உணவுகளை உட்கொள்வதாலும் இரத்த சர்க்கரை அளவு குறையும்.  

முதலில் மைதா மாவை தவிர்த்து ராகி மாவை கொண்டு உணவுகளை தயாரிக்கலாம்.  நூடுல்ஸ், சிப்ஸ், பிஸ்கட் ஆகியவை அனைத்துமே மைதாவில் தான் தயாரிக்கப்படுகிறது.  ராகி, கோதுமை, கம்பு ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.  ராகியில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின் டி மற்றும் இரும்புச் சத்து இருக்கிறது.  ராகி மாவை கொண்டு எப்படி எளிமையான ரெசிபிகளை தயாரிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.  

1. ராகி முறுக்கு: 

ராகி சக்லி என்று சொல்லப்படும் இந்த சிற்றுண்டி மகாராஷ்டிரத்தில் பிரபலமானது.  நம் தமிழ்நாட்டில் முறுக்கு எப்படியோ, அதேபோல் வட இந்தியாவில் சக்லி.  இங்கு நாம் அரிசி மற்றும் கடலை மாவில் செய்து சாப்பிடுவோம்.  அங்கு ராகி மாவில் செய்யப்படுகிறது.  இதனை சாப்பிடுவதால் உடலில் இரத்த சர்க்கரை சீராக இருக்கும்.  2f0lnhag
 

2. ராகி சமோசா:

மைதாவில் செய்யப்படும் சமோசாவை சாப்பிட்டு தொப்பை வந்துவிட்டதா?? இனி மைதாவில் சமோசாவை தயாரிப்பதை நிறுத்திவிட்டு ராகி மாவில் தயாரிக்கலாம்.  அதனுள் ஸ்டஃப் செய்ய வெள்ளரிக்காய், முந்திரி, பட்டானி ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம்.   நீங்கள் விருப்பப்பட்டால் பழங்களை சேர்த்தும் கூட சமோசா தயாரித்து சாப்பிடலாம்.  

ragi samosa 

3. ராகி ரொட்டி:

பூரி மற்றும் பராத்தாவை மைதா மாவு கொண்டு தயாரிப்பதை வழக்கமாகிவிட்டது.  அவற்றை தவிர்த்து ராகி மாவில் ரொட்டி செய்து சாப்பிடலாம்.  இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக இருக்கிறது.  ராகியில் ரொட்டி செய்து க்ரேவி மற்றும் ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும். 

nrm7o4ug
 

4. ராகி கோதுமை தோசை:

ராகி மற்றும் கோதுமை இரண்டும் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டால் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  மொருமொருப்பாக வரக்கூடிய இந்த் தோசையை சாம்பால் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.  

ragi wheat dosa
 Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  DiabetesRagi

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement