திறந்த வெளி டின்னர் சாப்பிட சென்னையின் 6 சிறந்த ரெஸ்டாரென்ட்கள்

   |  Updated: August 21, 2018 01:13 IST

Reddit
6 Of The Best Chennai's Al-Fresco Dining Venues That You Must Try

சென்னையின் கிழக்கு கடற்கரையில சாலையில், கடலை ஒட்டி திறந்த வெளியில் ஒரு ரொமேன்டிக் டின்னர் சாப்பிட்டிருக்கிறீர்களா? அல்லது மாநகரின் உயரமான கட்டிடத்தில், ஓப்பன் ரெஸ்டாரென்டில் ஒரு மாலையை கழித்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒரு சுகானுபவத்தை அனுபவிக்காதவர் நீங்கள் என்றால், இதோ உங்களுக்காக, இந்த அனுபவங்களைத் தரும் சென்னையின் 6 ரெஸ்டாரென்ட்களில் பட்டியல் இங்கே.

1. பே வியூ, தாஜ் ஃபிஷர்மேன் கோவ்:


 கடலுக்கு உங்களுக்கும் நடுவில் எதுவும் இருக்காது. கடற்கரையில் ஓலை கூரையின் கீழ் கடல் காற்றை உணர்ந்த படி அற்புதமான கடல் வகை உணவு வகைகளை சுவைக்கலாம். இங்கு வரும் மீன்கள் ஃப்ரெஷாக மீனவர்களால் கடலில் இருந்து நேரடியாக கொண்டு வரப்படுகிறது. கடல்சார் உணவு வகைகளும் செட்டிநாடு உணவு வகைகளும் இங்கு ஸ்பெஷல். ஆனால் இந்த ரெஸ்டாரென்டின் ஹைலைட், இதன் வியூ தான். 
 

Newsbeep

இடம்: கோவளம், கிழக்கு கடற்கரை சாலை

(Also Read: 5 Best Pan Asian Restaurants In Chennai)

 

A post shared by Arch (@archana1181) on

2. அக்வா, தி பார்க்:

லாஞ்ச் போன்ற டைனிங் செட்டப் கொண்ட ரெஸ்டாரென்ட் இது. ஹோட்டலின் நீச்சல் குளத்தின் அருகே டைனிங் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ரொமேன்டிக் டேட்டுக்கு இது சிறப்பான அனுபவத்தை தரக்கூடிய இடம். கிரில், தந்தூரி, பிளேட்டர், கெபாப் என உணவு வகைகள் நீளுகின்றன.

இடம்: T601, அண்ணா சாலை

3. கோகோமோ, இன்டெர்கான்டினென்டல் ரெசார்ட், மஹாபலி புரம்


சென்னையின் முதல் டிக்கி பார் இங்கு தான் இருக்கிறது என்று கூறலாம். பொழுத் சாயும் நேரத்தில் இங்கு உங்கள் டின்னரை மாலையை இனிதே தொடங்கலாம். சர்வதேச அளவில் இருந்து உள்ளூர் வரையிலான உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.

இடம்: நெம்மேலி, மஹாபலிபுரம்

(Also Read: 8 Best Restaurants in Chennai You Must Visit)

 

A post shared by Medha (@medha.a007) on

4. அப் நார்த், ரெய்ன் ட்ரீ அண்ணாசாலை:

பரபரப்பான அண்ணாசாலையில், எந்த வித ஆரவாரமும் இன்றி திறந்த வெளியில், ஒரு ரூஃப் டாப் ரெஸ்டாரென்ட் தான் உந்த அப் நார்த். எளிமையான வடிவமைப்பில், சென்னை மாநகர்த்தின் பரந்த பார்வைய தருகிறது. ஷோர்பாஸ் மற்றும் லஹோரி சீக் உணவு வகைகள் இவர்களது ஸ்பெஷல். இது போக சிறப்பு உணவு வகைகளும் இங்கு கிடைக்கும்.

இடம்: தேனாம்பேட்டை, அண்ணாசாலை

5. அபோ சீ லெவல், ரெயின் ட்ரீ, செயின்ட் மேரிஸ் சாலை


14 மாடியில் அமைந்திருக்கிறது இந்த ரூஃப் டாப் ரெஸ்டாரென்ட். தங்கு தடையின்றி சென்னை நகரை கழுகு பார்வை கொண்டு காணலாம். இவர்களின் காக்டெயிலோடு, வித்தியாசமான வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு உணவு வகைகள் இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

இடம்: செயின்ட்மேரிஸ் சாலை

(Also Read: 5 Places In Chennai To Find The Perfect Plate Of Idli Sambar)

6. கிப்லிங் கஃபே:

ஈ.சி.ஆர் சாலையில் தான் உள்ளது இந்த கஃபே. ஆனால் கடற்கரையில் இல்லை. இதன் ஸ்பெஷாலிட்டி ரொமேன்டிக்காக, பூங்காவுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இதன் செட் அப்தான். மர அடுப்பில் செய்யப்பட்ட பீட்சா மற்று தாய்லாந்து உணவு வகைகள் கிப்லிங்க் கஃபேவின் ஸ்பெஷாலிட்டி.
 

Listen to the latest songs, only on JioSaavn.com

இடம்: அக்கரை, கிழக்கு கடற்கரை சாலைஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement