நாள் ஒன்றிற்கு எத்தனை வாழைப்பழங்களை சாப்பிடலாம்!!

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் இருப்பதால் அதிகபடியாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 03, 2019 11:59 IST

Reddit
Weight Loss Diet: How Many Bananas You Should Have In A Day
Highlights
  • உடல் எடை குறைக்க வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
  • வாழைப்பழத்தில் கொழுப்பு சத்து துளியும் இல்லை.
  • வாழைப்பழத்தில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.

நம் எல்லோருடைய வீட்டிலும் எப்போதுமே இருக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம்.  மிக எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.  இதனை மில்க்‌ஷேக், ஸ்மூத்தி, டெசர்ட், பேன்கேக் போன்ற ரெசிபிகளில் சேர்த்து சாப்பிடலாம்.  உடற்பயிற்சிக்கு பின் அல்லது முன் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.  வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருபதால் குடல் இயக்கங்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் குணமாகும்.  

நன்மைகள்: 
வாழைப்பழத்தில் 27 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்ச்சத்து, 14 கிராம் சர்க்கரை மற்றும் 105 கலோரிகள் உள்ளது.  மேலும் இதில் நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.  வாழைப்பழத்தில் பொட்டாஷியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து, வயிறு உப்புசத்தை போக்குகிறது.  

mlme311

உடல் எடை குறைக்கவும், அதிகரிக்கவும் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.  நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது பொருத்து தான் அதன் பலன் இருக்கும்.  தினமும் இரண்டு பெரிய வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.  உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள்,  ஒரு வாழைப்பழத்தை உடற்பயிற்சி செய்வதற்கு முன் அல்லது பின் சாப்பிடலாம். இது உடலை வலுவாக வைக்க உதவும்.

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் இருப்பதால் அதிகபடியாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும்.  இதன் விளைவாக உடல் பருமன் அதிகரிக்கும்.  அதேபோல உடல் எடை குறைக்க நினைத்தாலும் சரி, தொடர்ச்சியாக வாழைப்பழம் சாப்பிடலாம்.  இதில் புரதம் அதிகமாக இருப்பதால் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com