காலை பிரேக்ஃபாஸ்ட்டை ஹெல்தியாக்க ஃப்ரூட் பட்டர் முதல் நட்ஸ் பட்டர் வரை!

இந்த ஸ்மூத் சில்க்கி ஃப்ரூட் பட்டர் நிச்சயம் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

  |  Updated: March 20, 2019 15:29 IST

Reddit
Fruit Butters: The Sweet Alternative To Nut Butters That You'll Fall In Love With
Highlights
  • Fruits butters are made of pulp of fresh fruits and lightly sweetened
  • Fruit butters work as great spreads on bread toasts or rotis
  • Fruit butters are super easy to make and store

உணவு வேளை வரும் வரை பசியெடுக்காமல்   இருக்க பீனட் பட்டர் ஒரு சிறந்த உணவு. பிரெட் டோஸ்ட்டின் மீது பீனட் பட்டர் தடவி சாப்பிடுவது நம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று. நம்மில் பலர் பீனட் பட்டர் சாப்பிட்டே வளர்ந்திருப்போம். ஒருவேளை பீனட் பட்டர் பிடிக்காதவர்களுக்கான சிறந்தத் தேர்வுதான் பழங்களால் தயாரிக்கப்பட்ட ஃப்ரூட் பட்டர். இது தேர்ந்தெடுக்கப்பட்ட  பழங்கள் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படுகிறது. ரெகுலராக இருக்கும் பட்டர்களைப் போலவே இந்த ஃப்ரூட் பட்டர் சாஃப்டாகவும் சுவையாகவும் இருக்கும்.

9cgf1quo

ஃப்ரூட் பட்டரை ஈஸியாக தயாரித்து நீண்ட காலம் வரை வைத்து சாப்பிடலாம். சீசன் சமயங்களில் கிடைக்கும் ஃப்ரூட் பட்டர் இன்னும் நல்ல பலன்களைத் தரும். 

Newsbeep

தரமான பழங்களைத் தேர்ந்தெடுத்து சுத்தம் செய்து, தோல் நீக்கப்பட்டு மிதமான சூட்டில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதம் வரை வேகவைத்துத் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள், பீச், ஆப்ரிகாட், ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளம், பியர், வாழைப்பலம் மற்றும் பேஸன் போன்ற பழங்கள் கொண்டும் தயாரிக்கலாம்.

 

ftbru2eg

1) சீசன் பழங்களைப் பயன்படுத்தி தயாரிப்பதால், வருடம் முழுவதும் வைத்து சாப்பிடலாம்.

2) செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக ரொட்டியில் தடவி சாப்பிடலாம்.

3) ஜாம், ஜெல்லி போன்றவற்றுக்கு சிறந்த மாற்றாக இருக்கும். 

v6ec9lqg

 

4) முடிந்த அளவில், சர்க்கரை கலக்காமல், தேன் மற்றும் இயற்கையில் விளைந்த பழங்களைப் பயன்படுத்தினால் நல்ல பலன்களைத் தரும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

5) இதில், வெண்ணிலா, ஏலக்காய் அல்லது மேப்பிள் சிரப் சேர்த்து நல்ல  ஃப்ளேவர்களையும் பெறலாம்.

இந்த ஸ்மூத் சில்க்கி ஃப்ரூட் பட்டர் நிச்சயம் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement