குழந்தைகள் விரும்பும் மேங்கோ கஸ்டர்டு ரெசிபி!!

பால் அல்லது க்ரீம், முட்டை, சர்க்கரை, ஸ்டார்ச், வென்னிலா, ஸ்ட்ராபெர்ரி, காபி போன்ற ஃப்ளேவர்கள் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு வகைகளையே குழந்தைகளும் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 17, 2019 11:46 IST

Reddit
Summer Dessert Recipe: How To Make Chilled Mango Custard At Home
Highlights
  • கோடைக்கேற்ற குளிர்ச்சியான இனிப்பு வகை இது.
  • கஸ்டர்டு சேர்ர்க்கப்பட்டிருப்பதால் ருசி அலாதியாக இருக்கும்.
  • மாம்பழத்தை கொண்டு இதுபோன்ற ருசியான ரெசிபிகளை தயாரிக்கலாம்.

இந்த கோடையை இதமாக்க குளிர்ச்சியான இனிப்பான மற்றும் ருசியான ரெசிபி கட்டாயமாக தேவை.  பொதுவாகவே இந்திய இனிப்பு பதார்த்தங்களில் நெய் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும்.  இந்திய இனிப்பு பதார்த்தங்கள் சூடாகவும் சுவையாகவும் இருக்கும்.  ஆனால் தற்போது எல்லோருக்கும் பேஸ்ட்ரி க்ரீம், கஸ்டர்டு, ஸ்வீட் சாஸ் போன்றவற்றில் நாட்டம் அதிகரித்து விட்டது.  பால் அல்லது க்ரீம், முட்டை, சர்க்கரை, ஸ்டார்ச், வென்னிலா, ஸ்ட்ராபெர்ரி, காபி போன்ற ஃப்ளேவர்கள் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு வகைகளையே குழந்தைகளும் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.  பைஸ், டார்ட்ஸ் மற்றும் புட்டிங் போன்றவற்றில் இந்த கஸ்டர்டு பயன்படுத்தப்படுகிறது.  ப்ளைன் கஸ்டர்டு க்ரீமுடன் பழங்கள் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து பேஸ்ட்ரி தயாரிக்கப்படுகிறது.  கஸ்டர்டுடன் மாம்பழம் சேர்த்தால் ருசியுடன் ஆரோக்கியத்திற்கும் நல்லது.  மேங்கோ கஸ்டர்டு ரெசிபியை எப்படி தயாரிப்பதென்று பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள்: 
வென்னிலா கஸ்டர்டு பௌடர் - அரை கப் 
பால் - ஒரு கப் 
மாம்பழம் - 2 
சர்க்கரை - 1 கப் 

ebe9442g

 செய்முறை: 
மாம்பழத்தின் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.  மீதமுள்ள பாலை ஒரு பெரிய பௌலில் ஊற்றி கொள்ளவும்.  அதில் கஸ்டர்டு பௌடர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலக்கி கொள்ளவும்.  இந்த கலவையை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.  சர்க்கரை கரைந்ததும் அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை அதில் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்திவிடவும்.  அதில் நீங்கள் விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.  பின் இதனை ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் வைத்திருந்து சாப்பிடலாம்.  அலங்கரிக்க சில மாம்பழ துண்டுகள் மற்றும் புதினா இலைகளை சேர்த்து கொள்ளலாம்.  இந்த ரெசிபியை அரை மணி நேரத்தில் செய்துவிடலாம்.  மூன்று மணி நேரம் பொறுக்க முடியாதென்றால் ஃப்ரீஸரில் ஒரு மணி நேரம் வைத்திருந்து சாப்பிடலாம்.  


Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement