சப்பாத்தி மாவு ஃபிரெஷ்ஷா நீண்ட நேரம் இருக்கனுமா…? அட்டகாசமான டிப்ஸ் இதுதாங்க

சப்பாத்தி மாவை பிசைந்து குறைந்தது 30 நிமிடமாவது ஊறவைக்க வேண்டும். வட்டமாக தேய்த்து சூடான தவாவில் போட்டு எடுக்க வேண்டும்.

Edited by: Saroja  |  Updated: May 14, 2019 13:55 IST

Reddit
Indian Cooking Hacks: Tips To Keep Chapati Dough (Atta) Fresh And Soft For Longer

ஒரு நாளைக்கு தேவையான மாவினை பிசைந்து வைத்து விடலாம்.

Highlights
  • சப்பாத்தி மாவை பாதுகாப்பாக வைக்க விட்டால் வீணாகிவிடும்.
  • ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அலுமினியம் ஃபாயில் சுருட்டி வைக்க வேண்டும்
  • சப்பாத்தி மாவை வைப்பதற்கு முன் எண்ணெய் தடவிய பின் வைக்க வேண்டும்

இந்திய மக்களின் உணவின் தவறாமல் இடம் பெறக்கூடிய ஒன்றென்றால் அது சப்பாத்திதான். வட்ட வடிவில் மிருதுவான, சப்பாத்தியை விதவிதமான சை டிஷ்கள், பருப்பு  வைத்து சாப்பிடுவது வழக்கம். சப்பாத்தியில் ஊட்டச்சத்துகளும் அதிகமாகவே உள்ளது. சப்பாத்தி அல்லது புல்கா அல்லது ரோட்டி அன்றாட டயட்டில்  இதற்கு தனியிடம் உண்டு. மாவு, தண்ணீர், எண்ணெய், உப்பு கொண்டு எளிமையாக தயாரித்து விடலாம். சின்ன சின்ன உருண்டைகளா உருட்டி அதை சப்பாத்தி கட்டையின் உதவியுடன் வட்ட வட்டமாக தேய்து எடுத்து சூடான இரும்பு தோசைக் கல்லிலோ அல்லது க்ரில் அல்லது தந்தூரி அடுப்பிலே சுட்டு எடுக்கலாம். இதனை காய்கறி குருமா அல்லது அசைவ குழம்புடன் சாப்பிடலாம். சப்பாத்தியை நெய் தொட்டு சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

வட்டவடிவமான சப்பாத்தியை செய்ய சில ஆண்டுகள் பயிற்சி தேவைப்படுகிறது. சப்பாத்தி வட்டமாக செய்யாவிட்டால் அதை இந்தியாவின் மேம் போன்ற வடிவத்தில் தான் கிடைக்கும் என்று பலர் வீடுகளில் கேலி செய்வதை பார்க்கலாம். மாவினை சரியாக பிசைந்து செய்யாவிட்டால் சப்பாத்தி சரியாக ஒருபோதும் வராது. சப்பாத்தி மாவை பிசைந்து குறைந்தது 30 நிமிடமாவது ஊறவைக்க வேண்டும். வட்டமாக தேய்த்து சூடான தவாவில் போட்டு எடுக்க வேண்டும். இந்தியா மக்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சப்பாத்தி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு தேவையான மாவை தயாரித்து எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாமா… 

9esr63o

சப்பாத்தி மாவை ஃபிரஷ்ஷாக நீண்ட நேரம் வைத்திருப்பது எப்படி?

சாப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்து காய்ந்து போய் விடுகிறதா…? அதை எப்படி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே இந்த தவறுக்கு காரணமாகிறது. மாவை பிசைந்து அதிக பட்சம் 24 மணிநேரம் அதை ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும். காய்ந்து போன சப்பாத்தி மாவில் சப்பாத்தி செய்தால் அதன் சுவை முற்றிலும் வேறாகவே இருக்கும்.  பிசைந்து வைத்த மாவை முறையாக பாதுகாப்பாக வைத்திருக்கும் முறைகளை இங்கு பார்ப்போமா... 

1. மாவை பிசைந்து அலுமினியம் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் ரேப்பரில் பயன்படுத்தி வைக்கவும்

மாவை பிசைந்து தயாரித்தப் பின் பாத்திரத்திலோ அல்லது குளிர் சாதனப் பெட்டியிலோ வைக்கும் போது அலுமினியம் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் ரேப்பரில் பயன்படுத்தி வைக்க வேண்டும்.  காற்று புகா வண்ணம் நன்றாக சுற்றி வைக்க வேண்டும். 

2. காற்று புகாத கண்டெய்னரில் வைக்கவும்

மாவினை காற்று புகாத வண்ணம் ஜிப் லாக் பையிலோ அல்லது  காற்று புகாத டப்பாவிலே  வைத்து பிரிட்ஜில் வைக்க வேண்டும். 

s3jvngtg

3. தண்ணீரை அளவாக ஊற்றவும்: 

மாவு பிசையும் போது தேவைக்கு பார்த்து தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் கூடுதலாக மாவு சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

4. எண்ணெய்யை பயன்படுத்தவும்:

மாவை அலுமினியம் ஃபாயில் அல்லது காற்று புகாத டப்பாவில் வைப்பதற்கு முன் எண்ணெய் தடவி பின் அதில் பிசைந்த மாவினை வைக்க வேண்டும். குளிர் சாதன பெட்டியில் வைக்கும்போது எப்போதும் கண்டெய்னரில் வைத்து வைக்க வேண்டியது அவசியம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement