தினைமாவு கொண்டு ப்ரௌனி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா??

தினைமாவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதனை கொண்டு மிகவும் மென்மையான ப்ரௌனி செய்யலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 12, 2019 13:36 IST

Reddit
Watch: Make Brownie With Quinoa For A Healthy Spin In Your Diet (Recipe Video)
Highlights
  • க்ளூட்டன் ஃப்ரீ மாவில் தினைமாவும் ஒன்று.
  • தினைமாவு கொண்டு சாக்லேட் ப்ரௌனி தயாரிக்கலாம்.
  • உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு இனிப்புகளை தயாரிக்கலாம்.

ப்ரௌனி சாப்பிட யாருக்குதான் பிடிக்காது?  அதிலும் குறிப்பாக சாக்லேட் ப்ரௌனி!! ப்ரௌனி ரெசிபியை ருசியாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே செய்யலாம்.  வழக்கமாக மைதா, சர்க்கரை மற்றும் செயற்கை எசன்ஸ் சேர்த்து செய்யப்படும் ப்ரௌனியை தவிர்த்து தினை போன்ற சிறுதானியங்கள் கொண்டு எப்படி ஆரோக்கியமாக தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.  

h6q37hjo

 

நன்மைகள்: 
க்ளூட்டன் ஃப்ரீ மாவு கொண்டு இனிப்புகளை தயாரித்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  தினையில் புரதம், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் குறைகிறது.  தினை, கோகோ பவுடர், வென்னிலா எசன்ஸ், பால், சாக்கோ சிப், முட்டை ஆகியவை சேர்த்து ருசியான ப்ரௌனியை தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 
தினை - ஒரு கப் 
கோகோ பவுடர்-  1 கப் 
வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி 
முட்டை - 3 
வென்னிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி 
தேன் - 2 மேஜைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி 
பால் - 2 மேஜைக்கரண்டி 
சாக்கோ சிப்ஸ் - தேவையான அளவு
 

செய்முறை: 
ஒரு பௌலில் வெண்ணெய் சேர்த்து ஹேண்ட் பீட்டர் கொண்டு நன்கு அடித்து கொள்ளவும்.  அத்துடன் பொடித்த சர்க்கரை, முட்டை, வேகவைத்த தினை, கோகோ பவுடர், வென்னிலா எசன்ஸ், தேன், பேக்கிங் பவுடர், பால் ஆகியவை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.  பின் ஒரு க்ளாஸ் ட்ரேயில் கலந்து வைத்த கலவையை சேர்த்து மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு இது.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com