என் உணவே தீபிகா தான் - ரன்வீர் சிங்

அமெரிக்காவில் இயங்கிவரும் தோசா லாப் என்னும் உணவகம் தான் இதனை செய்துள்ளது. இதனை தன் இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ள தீபிகா, “யாராவது பசியுடன் இருக்கிறீர்களா?” என கமண்ட் அடித்துள்ளார்

   | Translated by: Sriram Ranganath  |  Updated: January 02, 2019 14:02 IST

Reddit
U.S. Restaurant Names A Dish After Deepika Padukone: Ranveer Singh's Reaction Is Hilarious!

தமிழ்நாட்டின் உணவான தோசை, உலகம் முழுதும் பிரபலமாகி வருகிறது. பல நாடுகளில் மக்களின் பிடித்த உணவாக தோசை மாறியுள்ளது. இதனாலே பல தென்னிந்திய உணவகங்கள் பல வெளிநாட்டு நகரங்களில் திறக்கபட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, தன் நடிப்பால் உலக அரங்கில் தடம் பதித்து வருபவர் தீபிகா படுகோன். பெங்களூர் பெண்ணான தீபிகா, பாலிவுட் அரங்கில் டாப் ஹீரோயின். ஹாலிவுட்டில் வின் டீசலுடன் ஒரு படம் நடித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகம் தீபிகாவின் பெயரில் தோசை வகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் இயங்கிவரும் தோசா லாப் என்னும் உணவகம் தான் இதனை செய்துள்ளது. தன் மெனுவில் 'தீபிகா தோசை' என்னும் புதிய வகை தோசையை இந்த உணவகம் சேர்த்துள்ளது. இதனை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தீபிகா, “யாராவது பசியுடன் இருக்கிறீர்களா?” என கமண்ட் அடித்துள்ளார்.

அதற்கு தீபிகாவின் கணவரும் பிரபல நடிகருமான ரன்வீர், “நான் அதை சாப்பிடுவேன்” என கமண்ட் செய்துள்ளார்.

ரன்வீர் சிங்கின் கமண்ட்:

iq1fieu8

Listen to the latest songs, only on JioSaavn.com

 

இந்த தீபிகா தோசையானது, மிளகு தூவபட்டு, உருளைகிழங்கை உள்ளே வைத்து செய்யப்படுவதாக அந்த ஹோட்டல் மெனுவில் உள்ளது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement