சேமியா கொண்டு தயாரிக்கப்படும் 3 டெசர்ட் ரெசிபிகள்!!

சேமியாவை பாலில் நன்கு வேக வைத்து, அதில் கோயா, சர்க்கரை, தாமரை விதைகள், பாதாம், தேங்காய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலகாய் சேர்த்து செய்யப்படுகிறது.  

  |  Updated: September 24, 2019 16:33 IST

Reddit
Not Just Kheer, Use Seviyan (Vermicelli) To Make These Unique Desserts
Highlights
  • சேமியா சேர்த்து சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
  • சேமியாவை பாலில் வேக வைத்து டெசர்ட் ரெசிபிகளை தயாரிக்கலாம்.
  • ட்ரை ஃப்ரூட்ஸ், பால், கோயா சேர்ப்பதால் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.

விழாக்காலங்கள் என்றாலே இனிப்புகள் இல்லாமல் இருக்காது.  அதேபோல இனிப்பு என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது பாயாசம் தான்.  பாயாசம் வெவ்வேறு உணவு பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.  அதிலும் சேமியா கொண்டு செய்யப்படும் பாயாசத்திற்கு பலரும் அடிமையாகி கிடப்பார்கள்.  சேமியாவை பாலில் கொதிக்க வைத்து, சர்க்கரை, ஏலக்காய், ட்ரை ஃப்ரூட்ஸ், பாதாம் மற்றும் திராட்சை சேர்த்து கிரீமியான மற்றும் சுவையான பாயாசம் செய்யலாம்.  சேமியா கொண்டு தயாரிக்கப்படும் மற்ற டெசர்ட் ரெசிபிகளை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.  

கிமாமி சேமியா: 
ரமலான் பண்டிகையின் போது இந்த இனிப்பு தயார் செய்யப்படுகிறது.  சேமியாவை பாலில் நன்கு வேக வைத்து, அதில் கோயா, சர்க்கரை, தாமரை விதைகள், பாதாம், தேங்காய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலகாய் சேர்த்து செய்யப்படுகிறது.  இதனை மேலும் சில ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.  seviyan 625

 

சேமியா பர்ஃபி: 
முந்திரி பர்ஃபி, கோயா பர்ஃபி, பாதாம் பர்ஃபி போன்றவற்றை சாப்பிட்டிருப்போம். சேமியா, சர்க்கரை, பால் மற்றும் கோயா சேர்த்து சேமியா பர்ஃபி தயாரித்து சாப்பிடலாம்.  இதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து கொள்ளலாம்.  சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.  
 

jp6u02l

 

Listen to the latest songs, only on JioSaavn.com

ஆரஞ்சு கினோவா சேமியா: 
சேமியா மற்றும் கினோவாவை பாதாம் பாலில் வேக வைத்து, அதில் சிறிதளவு ஆரஞ்சு சாறு, நட்ஸ் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரித்து சாப்பிடலாம்.  இதன் ஃப்ளேவர் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.  இதன் நிறம் சாப்பிட தூண்டும் வகையில் இருக்கும்.  உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement