குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க 6 பொருட்கள்

Suparna Trikha  |  Updated: January 21, 2019 10:18 IST

Reddit
Winter Skincare: 6 Natural Ingredients For Soft and Nourished Skin In Winters

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போய்விடும். குளிர்காலத்தில் கதகதப்பாக இருப்பதற்கு ஏற்ற வகையில் உடை அணிவது போல நம்முடைய சருமத்தையும் முறையாக பாரமரிப்பது அவசியமாகிறது. குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்கத் தவறினால் நிச்சயமாக சருமம் வறண்டு, அரிப்பு மற்றும் வெடிப்பு கூட ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். சருமத்திற்கு போதுமான அளவிற்கு ஈரப்பதத்தை நிச்சயமாக நாம் கொடுக்க வேண்டும். உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் அளவில் சில இயற்கையான மாய்ஸ்ரேசருக்கான பொருட்களை பார்க்கலாமா... நம் வீட்டிலே இருக்கும் பொருட்களை வைத்து உங்களின் சருமத்தைப் பாராமரிக்கலாம். 

உங்களின் தலைமுடி மற்றும் சருமத்தைப் பராமரிக்கும் 6 பொருட்கள் இவைதான்....

தேன்
ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் ஃப்ரஷ் க்ரீம் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடலாம். இதை தொடர்ச்சியாக செய்தால் சருமம் மிருதுவாக இருக்கும். தேனை முகத்தில் தேய்த்து மஜாஜ் செய்து 5 நிமிடம் கழித்து முகம் கழுவினாலும் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். 

தலைக்கு ஷாம்பு தேய்த்து குளித்தபின் 2 டீஸ்பூன் தேனை 200 மி.லி தண்ணீருடன் கலந்து அதை கண்டீஷ்னராக பயன்படுத்தலாம்.

honey

ஓட்ஸ்
சருமத்திற்கான அழகு சாதனப் பொருட்களில் ஓட்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஓட்ஸை சாதாரணமாக தண்ணீரில் கரைத்து உடல்  மற்றும் முகத்தில் தடவி கழுவலாம். கிளின்ஸராகவும் இதைப் பயன்படுத்தலாம். ஓட்ஸுடன் தேன் மற்றும் தயிர் கலந்து தேய்த்தால் வறண்ட சருமம் மிருதுவாக்கும். உடலில் அரிப்பு இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்.
 

oatmeal

வாழைப்பழம்
எங்கும் கிடைக்கக்கூடிய வாழைப்பழம் சருமப் பராமரிப்புக்கு ஏற்ற ஒன்று. சருமத்தை மிருதுவாக்கி தோலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும், சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்கவும் செய்கிறது. முட்டையின் வெள்ளைக் கருவுடன் வாழைப்பழத்தை மசித்து முகத்தில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஷ் மாஸ்க் ஸ்கின்னை மிருதுவாக்குவதுடன்  சருமத்தை பளபளப்பாக்குகிறது.

 

banana

பாதாம் 
சருமப் பாதுகாப்பில் பாதாமிற்கு தனித்த இடமுண்டு.  பாதாம் பருப்பை அரைத்து முகத்திற்கு ஸ்கரப்பாக பயன்படுத்தலாம். பாலுடன் பாதாம் மாவை கரைத்து முகத்தில் ஸ்கரப் போல் தேய்த்துக் கழுவலாம். பாதாம் மாவுடன் ஓட்ஸ், அரிசி மாவு மற்றும் பால் கலந்தும் ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். முட்டி, முழங்கால் உள்ள கருப்பை நீக்கப் பயன்படுகிறது. 

 

almonds

மயோனைஸ்
புயூட்டி பார்லர் செல்ல நேரமில்லையா. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மயோனைஸ்ஸை முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகம் கழுவலாம். இது ஒரு முழுமையான ஃபேஷ் மாஸ்க்காக நிச்சயமாக இருக்கும். மயோனைஸ்ஸை 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து முடியில் தேய்த்து 40 நிமிடம் கழித்துக் குளிக்கலாம். 
 

47tmglk

பால்
இயற்கையான மாய்ஸ்ச்ரேசர்களில் ஒன்று பால். பால் சருமத்தை மிருதுவாக்குவதுடன் பளபளப்பாக்குகிறது. காய்ச்சாத பசும்பாலுடன் 2 டீஸ்பூன் கலந்து தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து தண்ணீரால் முகத்தைக் கழுவலாம். இதனால் சருமத்தில் வறட்சி குறைகிறது.fglqist8

ஃப்ரஷ் க்ரீம்
ஃப்ரஷ் க்ரீம்மை மாய்ஸ்ச்ரேசராகப் பயன்படுத்தலாம்.1 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் கோதுமை மாவைக் கலந்து  முகத்தில் தேய்த்துக் கழுவலாம். இந்த மாஸ்க்கை டெட் ஸ்கின்னை நீக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

 

fresh cream

ஃப்ரஷ் க்ரீம்
ஃப்ரஷ் க்ரீம்மை மாய்ஸ்ச்ரேசராகப் பயன்படுத்தலாம்.1 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் கோதுமை மாவைக் கலந்து  முகத்தில் தேய்த்துக் கழுவலாம். இந்த மாஸ்க்கை டெட் ஸ்கின்னை நீக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

மேற்சொன்ன பொருட்கள் எல்லாம் மிகவும் ஈஸியாக எல்லோரும் கிடைக்கக் கூடியது. இதைக் பயன்படுத்தி பாருங்கள் நிச்சயமாக உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.com

Disclaimer:

The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement