இது சீத்தாப்பழ சீசனாம்.! இதன் 5 நன்மைகள் தெரிஞ்சா கூடை கூடையா வாங்கி சாப்புடுவீங்க!

ஊட்டச்சத்து நிபுனர் ருஜுதா திவேகர், தன்னை Instagram-ல் பின்தொடருவோருக்கு, இது சீத்தாப்பழ சீசன் என்றும் மொத்தமாக வாங்கி வைத்து சாப்பிட இது தான் சரியான நேரம் என்று நினைவூட்டியுள்ளார்.

Sakshita Khosla  |  Updated: November 04, 2019 14:54 IST

Reddit
Nutritionist Rujuta Diwekar Talks About Benefits Of Custard Apple: 5 Reasons To Stock Up On It This Season!

Custard apple or sharifa is in season right now and it's time to stock up

Highlights
  • சீத்தாப்பழம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை கிடைக்கிறது.
  • சீத்தாப்பழத்தில் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
  • சீத்தாப்பழம் புண்களைக் குணப்படுத்துகிறது.

நம் வீட்டு பெரியோர்கள் ‘சீசன் உணவுகளை சாப்பிடுங்கள்' என அறிவுரை கூறக்கேட்டிருப்போம். பல மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக வாங்கி உண்ணுமாறு கூறுகிறார்கள். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளில் முழு அளவிலான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது, இது அந்தந்த பருவத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர், இந்தியாவில் உள்ளூர் மற்றும் பருவகால உணவை உட்கொள்வதில் முன்னணி மற்றும் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவர். Bollywood Divas கரீனா கபூர், கரிஷ்மா கபூர் மற்றும் வருண் தவான் உள்ளிட்டோர் ருஜுதா திவேகரின் வாடிக்கையாளர் பட்டியலில் உள்ளனர்.

ஒரு கூடை முழுக்க custard apple பழங்கள் இருக்கும் படத்தை தந்து Instagram பக்கத்தில் வெளியிட்ட ருஜுதா திவேகர், பழத்தின் பல்வேறு நன்மைகளை சுட்டிக்காட்டினார். கடினமான, பச்சை நிற செதில்களை மேல் தோலாகக் கொண்ட இப்பழம் இப்போது பருவத்தில் உள்ளது. எனவே, அதை சேமித்து வைப்பதற்கான சரியான நேரம் இது என்று திவேகர் தனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களுக்கு நினைவுபடுத்தினார்.

Also Read: 

Check out what she wrote about sitaphal or custard apple on Instagram:

கஸ்டர்ட் ஆப்பிள் பூக்கும் காலம் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தொடங்கி ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் பழங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

சீத்தாப்பழத்தின் சில நன்மைகள்:

1. புண்களைக் குணப்படுத்துகிறது மற்றும் (Acidity) அமிலத்தன்மையைத் தடுக்கிறது.

Also Read: 

2. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சீத்தாப்பழத்தில் "எந்த திரவ அடித்தளத்தையும் விட மென்மையான தோல் நிறத்தை கொடுக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன" என்று திவேகர் கூறுகிறார்.

3. கண் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

4. ஹீமோகுளோபின் (Hb) அளவை மேம்படுத்த உதவுகிறது.

5. உடல் பருமன் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. திவேகரின் கூற்றுப்படி, கஸ்டார்ட் ஆப்பிளில் "புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்" கொண்ட பயோஆக்டிவ் மூலக்கூறுகள் உள்ளன.

Also Read: 

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கொலாஜன் (collagen) உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இது அதிகமான நார்ச்சத்து கொண்டது, கிட்டத்தட்ட கொழுப்புகள் இல்லை. நீங்கள் அடுத்த முறை  கடைவீதிக்கு சென்று வரும்போது, உங்கள் கையில் பை நிறைய சீத்தாப்பழம் இருக்கட்டும்..!

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

About Sakshita KhoslaSakshita loves the finer things in life including food, books and coffee, and is motivated by self-indulgence and her love for words. When not writing, she can be found huddled in the corner of a cosy cafe with a good book, caffeine and her own thoughts for company.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com