மழைக்காலத்தை இதமாக்கும் உருளைக்கிழங்கு கார்ன் சூப்!!

சோளத்தில் எலுமிச்சை மற்றும் சாட் மசாலா சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.  இது மிகவும் சுவையாக இருக்கும். 

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 25, 2019 13:16 IST

Reddit
This Hearty Potato and Corn Soup Spells Monsoon In A Bowl (Recipe Inside) 
Highlights
  • இந்த சூப் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சூப்பை அடிக்கடி குடிக்கலாம்.
  • மிக எளிதில் இதனை சமைத்து சாப்பிடலாம்.

மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது.  இந்நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் தொற்று ஏற்படலாம்.  இதன் விளைவாக சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு போன்றவை உண்டாகும்.  உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றினால் மட்டுமே இதுபோன்ற உடல் உபாதைகளில் இருந்து தப்பலாம்.  அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.  அந்தந்த பருவக்காலத்தில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் தன்மை மிகுந்திருக்கும்.  சில காய்கறிகள் மற்றும் மூலிகைகள் சேர்த்து சூப் தயாரித்து குடித்து வரலாம்.  இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் எடை குறைக்கவும் உதவும்.  அப்படிப்பட்ட சூப் ரெசிபியை பார்ப்போம். 

vjtkcocg

 

சோளத்தில் எலுமிச்சை மற்றும் சாட் மசாலா சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.  இது மிகவும் சுவையாக இருக்கும்.  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.  அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வெண்ணெய் சேர்க்கவும். 

இரண்டு வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்க்கவும்.  வெங்காயம் வதங்கிய பின் அதில் பட்டை இலை, சோளம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

மேலும் அதில் பூண்டு, ரோஸ்மெரி, துளசி, ஒரீகனோ, குடைமிளகாய், உருளைக்கிழங்கு, ஒயிட் ஒயின் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

10 நிமிடங்கள் நன்கு வேக வைத்து, இறக்கி ஆற வைக்கவும்.

பின் இவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். 

அரைத்த விழுதை மீண்டும் கொதிக்க விட வேண்டும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

அதன் மேல், மிளகு, பார்ஸ்லே ஆகியவை தூவி சூடாக பரிமாறலாம்.Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  MonsoonSoup

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement